பொன்மொழிகள்
- ஈசனே மனிதனாகிறான். மனிதனான ஈசனே தன் உயர்ஞானத்தால் தன்னை அறிவான்.
- புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள். துன்பத்திற்கு அஞ்சி உண்மையை விட்டுவிடாதீர்கள்.
- ஆயிரம் ஆண்டு வணக்கத்தை விட அரைநிமிட ஆராய்ச்சியே மேல்.
- அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது.
- பெற்றவரும் தாயல்ல! பாலூட்டியவடும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்!
- பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி
- நாவில் ஒருசிறு நோய் இருந்தபோது நல்லருசி அறியாதது போல், பிறர்மேல் வேறுபாடு சிறிதளவு இருந்தாலும் பேரறறிவுக்காளாக மாட்டார்கள்.
- குருவுக்கு செய்த தொண்டும் சபைக்குச் செய்த கடமையும் கடனாகாது. துரிதம் கொண்டாவது, தூரம் சென்றாவது மக்களின் துன்பங்களை நிவர்த்திக்க முற்படுவதே துறவறத்தின் செயலாகும்.
- சுருதி, நூல், சாஸ்திர, வேதமதங்களெல்லாம் சுருக்கிசொல்லொன்றில் அடக்கிச் சுழிமுனையும் கடத்தி சும்மாயிருக்கும் சுகமே உணர்வு.
- ஞானத்தின் மூதாதை துன்பம்,ஞானத்தின் பரம்பரை பொறுமை, ஞானத்தின் நண்பன் அனுபவம்.
- நடுப்பகலும் நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை. அதுபோல் உலகத்தின் நெருக்கடியும் மனிதர்களின் துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.
- வறுமையில் பொறுமையுள்ளோர் வல்லவராவார்.
- இருக்கும் இடத்தில் அழுக்கும், உடுத்தும் உடையின் அழுக்கும், பரு உடலின் மேல் அழுக்கும், உள்ளத்தின் மன அழுக்கும் இல்லாதிருந்தால் அறிவாளியாவர்.
- உருக்கமும் உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால், தொல்லையும் நோயும் தானே விலகும்.
- எந்த இடையூறு இன்னல்களையும் அனுபவத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக்கூடிய வன்மை உடையவனாகப் பிரகாசிப்பான்.
- மயக்கம் தெளியாதவர்கள் - பக்தர்கள், யோகிகள், சித்தர்கள்.
- மயக்கம் தெளிந்தவர்கள் - அறிவாளிகள், நாஸ்திகர்கள், முக்தர்கள்.
- எண்ணம், செயல், சொல் சீராய் இருப்பாரே ஜெகதீசன்.
- கனியைப் பேன்றது ஆன்மா; வாசனையைப் பேன்றது அன்பு; அழகைப் பேன்றது அருள்; சுவையைப் பேன்றது அறிவு.
- உடலை நடத்துவது ஞாபகம், உடலில் உணர்வது அறிவு, உடலாய் இருப்பது நினைப்பு, நினைப்பாய் உள்ளது நான்.
- இல்லறமில்லாத துறவறமில்லை; துறவறமில்லாத இல்லறமில்லை.