நெற்றிக்கண் தியானம் என்றால் என்ன?


நெற்றிக்கண், ஞானக்கண், ஆக்கினை ஸ்தானம், சுழிமுனை, பிட்யூட்டரி க்ளான்ஸ் , நாளமில்லா சுரப்பிகள் என்று சொல்லலாம். நமது இரண்டு கண்களுக்கும் மூக்கின்மேல் சுழிமுனைக்கும் புருவங்களின் இடை நடுவே சிறு துவாரத்தில் பத்தில் ஒரு பாகம் அளவிற்கு மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு நெற்றிக்கண் என்று பெயர். இதில் மிக நுட்பமான ஜவ்வு மூடிக்கொண்டு இருக்கிறது. இந்த ஜவ்வு நெற்றிக்கண் தியானம் செய்யும் போது இந்த ஜவ்வு திறக்கப்படுகிறது. நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமில்லை. வணக்கம், வந்தனம், நமஸ்காரம் என்றும் அவரவர் மதங்களுக்கேற்றபடி வணக்கத்தை தெரிவித்து கொள்கிறார்கள். நெற்றிக்கண் குறியீடாக நாமம் இட்டும், பொட்டிட்டும், விபூதி, பட்டையிட்டும், இப்படி வழிபாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு ஞாபகம் வரவில்லை என்றால் நெற்றிக்கண்ணில் தூண்டப்பட்டால் அங்கே ஞாபகம் வருகிறது. நாம் எதை நினைக்கின்றமோ அதை அடைவதற்கு நெற்றிக்கண்ணில் பயனுள்ளதாக இருக்கிறது. எண்ணங்கள் வலிமை படுத்த வேண்டுமென்றால் நெற்றிக்கண்ணில் வலிமைப்படுத்தி கொள்ளலாம் வாழ்க்கை முறைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள. வேண்டுமென்றால் நெற்றிக்கண் மூலமாக ஒழுங்குபடுத்தி கொள்ளலாம். நம் செயல் திறன்களை மேம்படுத்த வேண்டுமென்றால் நெற்றிக்கண்ணால் செயல் படுத்திக்கொள்ள முடியும். நெற்றிக்கண் மெய்யுணர்வு என்று சொல்லலாம். மெய்யுணர்வில் நாட்டம் வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளலாம். நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம். தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும். என்ற வாசகத்தின்படி நெற்றிக்கண்ணில் தட்டுங்கள் , நெற்றிக்கண்ணில் கேளுங்கள் கொடுக்கப்படும். தியானம் செய்வதால் தான் ஒரு மனிதன் மாமனிதனாகிறான், மகான்களாக, ஞானிகளாக உருவாகிறார்கள். எல்லா மனிதனுக்குள் ஒரு மாமனிதன் இருக்கிறான். தியானம் செய்ய நினைப்போர் ஆயிரத்தில் ஒருவர், தியானம் செய்பவர் பத்தாயிரத்தில் ஒருவர், தியானத்தில் மேன்மை பெறுபவர் லட்சத்தில் ஒருவர் , தியானத்தில் முழுமை பெறுபவர் பல கோடியில் ஒருவர். நெற்றிக்கண் தியானம் செய்வோம் மேன்மை பெறுவோம்