மெய்யுணர்வு என்றால் என்ன?

மெய்யுணர்வு என்பது ஒரு துடிப்பு ,ஒரு அழுத்தம், ஏதோ ஒரு தூண்டுதல் கிடைக்கக் கூடிய இடம் நெற்றிக்கண், உச்சிக்கண், பிடரி கண் மெய்யுணர்வு என்பது உயிர் மையம் என்றும் சொல்லலாம். உடலில் எல்லா இடங்களிலும் இருக்கிறது உணர்வு. அவைகளுக்கு எல்லாம் தலைமை ஏற்பதுதான் மெய்உணர்வு. உயிர்மையங்களின் தளபதி என்றும் சொல்லலாம். நெற்றிக்கண்ணிற்கு கொண்டுவரும் பயிற்சி தான் தீட்ஷை ஆகும். ஒரு குருமூலமாக முதுகு தண்டின் வழியாக மெய் உணர்வை நெற்றிக்கு கொண்டுவந்து மையப்படுத்துவது, நிலைநிறுத்துவது, செயல்படுத்துவது , இந்த சக்தியை ஆற்றலாக பெருக்கி. மெய் உணர்வு சக்தியை பயன்படுத்தி ,பிரபஞ்சத்திலிருந்து பெறக்கூடிய சக்தியை ,உடலில் இருக்கக்கூடிய சக்தியையும், ஒன்றினைத்து சக்தியை கொண்டு,உடலுக்காகவும், மனதுக்காகவும் இந்த மெய்யுணர்வு பயன்படுகிறது. நமக்கு கண், காது, மூக்கு, வாய் எல்லோருக்குமே இருக்கிறது. நெற்றிக்கண்ணில் ஒன்று செயல்படுகிறது என்று நாம் தியானத்தின் மூலமாக மட்டும் கற்றுக்கொள்ள முடியும். நெற்றிக்கண்ணில் ஏஏதோ ஒன்று இருக்கிறது அது இருபத்திநான்கு மணிநேரமும் தியானத்தில் இருப்பதற்காக ஒரு தூண்டுதல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நெற்றிக்கண் பயிற்சி கற்றுக்கொண்டமேயானால் அன்றோடு மட்டும் அல்ல இந்த பயிற்சி இருபத்திநான்கு மணிநேரமும் பயன்படும். நெற்றிக்கண் பயிற்சி எடுத்துவிட்டீர்கள் என்றால் அன்றோடு மட்டுமல்ல இருபத்திநான்கு மணிநேரமும் பயன்படும். தூங்கும் போதும் நடக்கும் போதும் பேசும் போதும் வரும். எல்லா நேரங்களிலும் நாம் மல ஜலம் கழிக்கும் போதும் இந்த உணர்வானது தூண்டுதல் கிடைக்கும். இது உங்களுடன் பயணிக்க கூடிய மெய்யுணர்வு தான் உங்களுடன் மட்டும் பயணிக்கிறது மட்டுமல்லாமல் மரணத்திற்கு பிறகும் பயணிக்க கூடிய ஒன்றே ஒன்று இந்த மெய்யுணர்வு மட்டும் தான். 15 நாட்கள் பயிற்சியில் நீங்க எடுத்துகிட்டீர்களானால் இந்த உணர்வானது ஏட்டுக்களமாகவே இருந்துகிட்டே இருக்கும். இந்த உணர்வை எப்படி நெற்றிக்கு கொண்டு போகணும் என்பதை இப்போது நான் உங்களுக்கு நான் சொல்கிறேன். இது குரு என்ற முறையிலேயோ நெற்றிக்கண் ஆசிரியர் முறையிலேயோ இந்த உணர்வை தூண்டுதல் கொடுக்கிறார்கள். நாம் இந்த உணர்வை எப்படி நிலை நிறுத்துவதென்றால் ஒரு படகு இருக்கிறது. அதற்கு ஒரு துடுப்பு இருந்தால்தான் நாம் எந்த இடத்திற்கு போக வேண்டும் எந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்று செல்ல முடியும். படகுன்னா படகில் உட்கார்ந்தால் மட்டும் போதாது. நம் கைகளிலாலோ அல்லது துடுப்பினாலோ தள்ளினால் மட்டுமே ஒரு இடத்திற்கு செல்லும் வழி அதுதான் மெய்யுணர்வு உங்கள் வாழ்க்கையில் நடக்கின்ற அனைத்தையும் சிறப்பாக எடுத்துகொண்டு செல்வதுதான் நெற்றிக்கண்ணில் இருக்கக்கூடிய மெய்யுணர்வு என்கிற துடுப்பை எடுத்துக்கொண்டு துன்பம் என்கிற இந்த உலகம் துன்பமானது வேறு சிலர் இந்த உலகம் சுகமானது. இதை இரண்டையும் எடுத்துக்கிட்டு போறதுக்கு துடுப்பு அவசியம். எப்போதெல்லாம் சோர்வு கவலை மற்றும் துன்பம் அடையறீங்களோ அப்போதெல்லாம் இந்த தியானம் வந்து பயனளிக்கும். ஒரு நேரங்களில் காடுகளில் மலைகளிலேயோ இருந்து கொண்டு இருந்தது இன்று நாம் வீட்டிற்கே தியானத்தை தருகிறோம். தியானம் செய்தால் சன்னியாசி ஆகிடுவாங்க குடும்பத்தை விட்டுட்டு போய்டுவாங்க அப்படி பலரும் நினைத்து கொண்டிருந்தார்கள். வீட்டில் தியானம் பண்ணும்போதே சாமியாராக போகப்போறீங்களா அப்படினு பிரச்சனைகள் வந்தது இந்த தியானம் வாழ்வியல் சார்ந்தது. இந்த தியானம் செய்யும் போது நம் மனைவிக்கு என்ன அவர்களுடைய நிலைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கேற்றவாறு நடந்து கொள்வது நம் பிள்ளைகளுக்கு கேற்றவாறு நடந்து கொள்வது அவர்கள் நிலையிலிருந்து பார்ப்பது நம் சமுதாய நிலையிலிருந்து பார்ப்பது நம் நிலையிலிருந்து மட்டும் பார்த்தோமென்றால் அது ஒரு முட்டாள் தனமான ஒரு விஷயம். புரிதல் இல்லாத ஒரு விஷயம் இந்த தியானத்தில் எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் தன்மை அவர்களுக்கும் அறிவு எண்ணம் உடல் ஆசை மனம் இருக்கு ஆனால் நாம் சொல்வதை மட்டும் தான் எல்லோருமே கேட்கணும். நம் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அப்படியெல்லாம் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் கட்டுப்பாடு என்று இருக்கு. அதுக்கு வந்து நாம் துணை புரியணும் இதையெல்லாம் விட்டுட்டு தியானம் பண்ணுவதில் ஒரு நன்மையுமில்லை நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேரின் மனநிலையையும் புரிந்து கொண்டால்தான் தியானம் நமக்கு வழி வகுக்கும். நமக்குள் ஒரு பேரின்பம் இருக்கு அவர் யாரிடமும் பேசமாட்டார் அப்படி எல்லாம் தியானத்தில் கிடையாது. தியானத்தின் மூலாமாக எல்லா ஆற்றல்களுக்குள்ளும் உருவாகும். இந்த தியானத்தை செய்தால் தொலை தூரத்திற்கு சென்று விடுவோம் அப்படி எல்லாம் இல்லை. இந்த உலகத்தில் உள்ள விஷயங்கள் நாம் புரிந்து கொள்ளாத விஷயங்களை சந்தோஷமான விஷயங்களை எத்தனையோ இன்ப துன்பங்கள் இருக்கு இதையெல்லாம் பார்த்து அனுபவித்து எது சரி எது தவறு இதையெல்லாம் பார்த்து அனுபவித்து இதை எப்படி பாதுகாப்பது எப்படி சரி செய்வது துன்பத்தை கண்டு பயந்து போகணும் என்று அவசியமில்லை அந்த துன்பத்தினால் என்ன நடக்கிறதென்று பார்ப்பதுதான் இந்த தியானம் அதுமாதிரி பயம் பயம் ஏன் வருகிறது போய்பார்க்கணும் இன்று ஒரு நாய் நம்மை துரத்திக்கொண்டு வருகிறது அதற்காக நாம் ஓடிவிட முடியாது அதற்காக நாம் அதை எதிர்த்து நின்று பாருங்க கட்டாயம் அந்த நாய் அமைதியாகி வந்த வழியே போய்விடும் அதுதான் உண்மை. அதுமாதிரி பிரச்சனைகளை கண்டும் நாம் பயப்படக்கூடாது. அமைதியாக இருங்கள் பிரச்சனையை போராடணும்னு சொல்லவில்லை. அமைதியாய் நின்று பாருங்கள் இதற்கு இந்த நெற்றிக்கண் தியானம் உங்களை வழிப்படுத்தும். வாழ்வியலை சரிப்படுத்தும். உங்கள் குடும்பத்தில் இரண்டு பேரும் தியானம் செய்வதினால் மெய்யுணர்வு நமக்கு துடுப்பு மாதிரி இருந்து கொண்டு நமக்கு நடக்கும் அத்தனை பயணங்களையும் நாம் எந்த வழியிலேயும் சென்று அந்த படகு கவிழ்ந்து விடாமல் போக வேண்டிய இடத்திற்கு போக முடியாமல் சிரமப்படாமல் அந்த துடுப்பு நமக்கு அவசியம் உங்களுக்கு மெய்யுணர்வு அவசியமானது. உங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல வாழ்விற்கு அப்பாற்பட்டு செல்லக்கூடிய உணர்விற்கும் மெய்யுணர்வுதான் என்று சொல்லிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்